ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி பரப்புரை..! திமுக சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிப்பு..!
ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயத்தை ஆதரித்து உதயநிதி பரப்புரை மேற்கொண்டார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் திமுக மும்முரமாக பணியாற்றி வருகிறது. வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர்.
உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற திமுக வேட்பாளர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து இன்று பிரச்சாரம் நடத்தினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான திமுக வேட்பாளர் பட்டியலை மார்ச் 28 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டபோது, ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு பி.எம். ராமஜெயம் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதி முன்பு 2021-ல் திமுகவின் எம்.சி. சண்முகையா வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை புதிய முகமாக ராமஜெயம் களமிறக்கப்பட்டார்.
இதையும் படிங்க: விஜய் பரப்புரைக்கு முட்டுக்கட்டையா? பகிரங்க குற்றச்சாட்டு... சட்டென ரியாக்ட் செய்த சென்னை மாநகராட்சி..!!
இந்தச் சூழலில் உதயநிதி ஸ்டாலின், தொகுதியில் நேரடியாகப் பரப்புரை மேற்கொண்டார். அவர் ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் ராமஜெயம் அவர்களை ஆதரித்து, மக்கள் மத்தியில் உரையாற்றினார். பரப்புரையின்போது, திமுக அரசின் கடந்த ஐந்தாண்டு சாதனைகளை எடுத்துரைத்தார். குறிப்பாக, மக்கள் நலத் திட்டங்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்கள் மேம்பாடு, விவசாயிகளுக்கான உதவிகள் போன்றவற்றை வலியுறுத்தினார். மேலும் அதிமுக தொடர்பான பல்வேறு விமர்சனங்களை தனது பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின் முன் வைத்தார்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் சொத்துக்கணக்கில் தில்லுமுல்லு! வருமான வரித்துறை விசாரிக்க வேணும்! கோர்ட்டில் மனு!