×
 

பாஜக கேடுகெட்ட கட்சி..! EPS முரட்டு அடிமை..! திமுக மாநாட்டில் சாட்டையை சுழற்றிய உதயநிதி…!

திமுக மகளிர் அணி மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, கிண்டி திணிப்புக்கு எதிராக பெண்களை திரட்டி போராடியவர்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் தான் என்று தெரிவித்தார். திராவிட இயக்கத்தின் தொட்டில் டெல்டா என்று தெரிவித்தார். மகளிர் முன்னேற்றத்தில் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். தேர்தல் எப்போது வந்தாலும் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவார் என்றும் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்தார் என்றும் கூறினார்.

திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசியதாகவும் மைக் என நினைத்து கண்ணாடியை பார்த்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஞாபகப்படுத்த விரும்புவதாக கூறினார். மணிப்பூரில் மிகப்பெரிய கலவரம் நடந்தது என்றும் அங்கு பெண்களுக்கு நடந்த கலவரம் எல்லாம் நாடே பார்த்ததாக கூறினார். ஏராளமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்றும் பாஜக ஆட்சி சரியில்லை, சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனது என்று மணிப்பூரில் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருவதையும் குறிப்பிட்டார்.

குஜராத் முதலமைச்சர் ஆக பிரதமர் மோடி இருக்கும்போது இஸ்லாமிய மக்களுக்கு எதிராக ஒரு கலவரத்தை ஏற்படுத்தியதாகவும், அந்த கலவரத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது பெண்கள் என்றும் கூறினார். 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானுவை சங்கி கூட்டம் பாலியல் பணக்காரன் செய்தது என்றும் குடும்பத்தையே கொலை செய்ததாகவும் அந்த வழக்கில் குற்றவாளிகள் பக்கம் நின்றது பாஜக அரசு என்று கூறினார். காஷ்மீரில் ஆசிபா, உத்தரப்பிரதேசத்தில் பட்டியலின சிறுமி… இப்படி பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சங்கிகளால் கொலை செய்யப்பட்டதாக கூறினார்.

இதையும் படிங்க: எங்கு பார்த்தாலும் போராட்டம்..! இனி எப்போதும் திமுக ஆட்சி இல்லை..! இபிஎஸ் திட்டவட்டம்..!

இந்த குற்றவாளிகளுக்கு ஆதரவு கொடுத்த கேடுகெட்ட கட்சி தான் பாஜக என்று சாடினார். இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று தெரிவித்தார். இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமான மாநிலங்கள் எது என்று கேட்டால் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என்றும் இந்த நான்கு மாநிலங்களையும் ஆட்சி செய்து கொண்டிருப்பது பாஜக அரசு என்று தெரிவித்தார்.

பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகள் செய்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து ஓட்டு கேட்க வெட்கமாக இல்லையா என்று தமிழ்நாட்டுப் பெண்கள் கேட்பதாக தெரிவித்தார். இப்படிப்பட்டவர்கள் இங்கு வந்தால் மகளிர்க்கும் பாதுகாப்பு இருக்காது, மாநிலத்திற்கும் பாதுகாப்பு இருக்காது எனக் கூறினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முரட்டு அடிமை என்று கூறினார். தற்போது புதுப்புது அடிமைகள் உருவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எத்தனை பேர் வந்தாலும் திமுகவை அவர்களால் தொட்டு கூட பார்க்க முடியாது என்றார். 

இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் களம்..! யார் யார் வேட்பாளர்கள்? 5வது நாளாக EPS நேர்காணல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share