×
 

புஷ்பா பட பாணியில் சோஃபா ஆட்சி...! உதயநிதி குற்றச்சாட்டு.. திமுகவினர் வெளிநடப்பு..!!

தமிழக வெற்றிக்கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மூன்றாவது நாள் அமர்வு தொடங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

ஏனெனில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த திராவிடக் கட்சிகளின் மாற்று ஆட்சி முறையை உடைத்து புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. 108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை நிரூபிக்க 118 இடங்கள் தேவைப்பட்டது. தமிழக வெற்றி கழகம் அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு என்று சட்டமன்றத்தில் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார். நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக தெரிவித்தார். Instagram ரீல்ஸ் அரசாக இல்லாமல் மக்களுக்கான நன்மைகளை செய்ய வேண்டும் போன்ற கருத்துக்களை முன்வைத்தார். தமிழக வெற்றிக்கழக அரசு மீதான விமர்சனங்கள் பரவி வருவதாக தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை, தாயுமானவன் திட்டம், நான் முதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களுக்காக மக்கள் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மக்களுக்கான அரசாக இல்லாமல் புஷ்பா படம் பாணியில் சோபா ஆட்சியாக மாறி இருக்கிறது என்று விமர்சித்தார்.

இதையும் படிங்க: அரசியலில் நாங்க தான் சீனியர்..! எதிரி கட்சி இல்ல.. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேரவையில் உரை..!

வரும் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை தொடங்கி பிற திட்டங்களுக்கான நிதியை வழங்க வேண்டும் என்று உதயநிதி வலியுறுத்தினார். தமிழக வெற்றிக்கழக அரசு ஆட்சிக்கு நாங்கள் இடையூறு தர மாட்டோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். பிறகு தமிழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க: அதிரடி திருப்பங்கள்..! எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.? நாளை திமுக MLAக்கள் கூட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share