×
 

"காமெடியா இருக்கு"... கைதான உதய்..! போலீஸ் வாகனத்தில் ஏறியதும் பேட்டி..!!

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் போது பேட்டி அளித்தார்.

தஞ்சாவூரில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது முதலமைச்சர் விஜய்யை ‘டம்மி முதல்வர்’ எனக் குறிப்பிட்டு பேசினார். அதுமட்டுமில்லாத முதல்வர், நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கண்டனங்கள் வலுத்தன.

இதைத்தொடர்ந்து போலீசார் உதயநிதி மீது கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அதிரடியாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து தஞ்சாவூருக்கு போலீசார் அழைத்துச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

போலீஸ் வாகனம் முன்பு திமுகவினர் மறியலில் ஈடுபட்டு கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். போலீஸ் வாகனத்தில் ஏறியதும் உதயநிதி பேட்டி அளித்தார். அப்போது தன் மீரான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். ஏதாவது ஒரு பிரச்சனை நடந்தால் அதனை திசை திருப்பும் வேலையை தமிழக வெற்றிக்கழக அரசு செய்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். திமுகவின் கடைசித் தொண்டன் கூட இது போன்ற கைது நடவடிக்கைக்கு பயப்பட மாட்டான் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

 

இதையும் படிங்க: "அந்த நடிகை"..!! கலைஞரின் பேரன்-னு சொல்லி இப்படி ஒரு பேச்சா.? உதயநிதிக்கு வினோஜ் பி. செல்வம் கண்டனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share