×
 

"பொதுமக்களை தாக்கும் திமுகவினர்"..! சட்டம் கடமையைச் செய்யும்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

சட்டம் தன் கடமையை செய்யும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பெரிய பரபரப்பு நிலவி வருகிறது. தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் உரிமை மற்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, கூட்டத்தில் எழுப்பப்பட்ட சில கோஷங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அந்த கருத்துகள் நடிகை திரிஷாவை குறிப்பிடுவதாகவும், இரட்டை அர்த்தம் கொண்டதாகவும் விளக்கப்பட்டன.

இதையடுத்து ஆளும் தவெக மகளிர் அணியினர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.செவ்வாய்க்கிழமை காலை சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு காவல்துறையினர் சென்று அவரை கைது செய்தனர். அவர் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த கைது நடவடிக்கை திமுகவினரிடையே கடும் எதிர்ப்பை தூண்டியது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். சாலை மறியல், கண்டன ஆர்ப்பாட்டம், கோஷங்கள் என தொடர்ந்து நடைபெற்றன. தேனியில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அங்கு காவல்துறையினர் பலரை தடுத்து வைத்தனர். திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இதேபோன்ற போராட்டங்கள் நடந்தன. சென்னையில் உதயநிதி இல்லம் அருகேயும், போலீஸ் வாகனம் செல்லும் பாதையிலும் திமுகவினர் குவிந்தனர். சில இடங்களில் வாகனங்களை தடுத்து நிறுத்தினார்கள். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க: தமிழ் சினிமா ஜாம்பவானுக்கு அஞ்சலி... நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

இந்த நிலையில், மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் மிகவும் மோசமானது என கூறினார். இவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள் என கூறினார். இது ஏற்புடையது அல்ல. சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் சட்டம் தான் கடமையை செய்யும் என கூறியுள்ளார்

இதையும் படிங்க: CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share