உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!
உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு போலீசார் சென்று உள்ளனர்.
தஞ்சாவூரில் திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனகல் கட்டிடம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். முதல்வர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது அருகில் இருந்து ஒரு நடிகையின் பெயரை கூறியுள்ளார்கள். அதற்கு உதயநிதி ஸ்டாலின் சிரித்தபடியே எங்கு தண்ணீர் வரவில்லை என்றாலும் அங்கு தண்ணீர் வர வேண்டும் என்ற வார்த்தையை கூறினார்.
அப்போது, தனிப்பட்ட வாழ்க்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என அவரது பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
உதயநிதி ஸ்டாலினை கைது செய்யச் சென்ற போலீசார் உடன் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாக்குவாதம் செய்து உள்ளார். மேலும் உதயநிதியின் வீட்டிற்கு ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் வருகை தந்துள்ளார். உதயநிதியை கைது செய்ய சென்றபோது போலீசார் அவரது மனைவி கிருத்திகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!
இந்த தகவல் அறிந்ததும் உதயநிதி ஸ்டாலினின் வீட்டை நோக்கி திமுகவினரும் படையெடுத்து வருகின்றனர். என்ன வழக்கு என்றும் யார் புகார் கொடுத்தது என்றும் சரமாரி கேள்விகளை போலீசாரிடம் எழுப்பி வருகின்றனர். தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசிய நிலையில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய போல சாரும் நீலாங்கரை இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர் இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "வறண்டு கிடக்குது காவிரி... ஜோக்கர் கூட்டமான அமைச்சரவை"..! உதயநிதி கடும் குற்றச்சாட்டு..!!