#BREAKING: ED இல்ல மோடியே வந்தாலும் பயப்பட மாட்டோம்.. துணை முதல்வர் உதயநிதி தடாலடி!!
ED இல்லை மோடியே வந்தாலும் நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக திமுகவைச் சேர்ந்தவர்கள் குறிவைத்து அமலாக்கத்துறை சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, திமுக சுயமரியாதை உள்ள கட்சி என்றும் மிரட்டி அடிபணிய வைக்க அடிமைக் கட்சி இல்லை எனவும் கூறினார். அமலாக்கத்துறை சோதனையை சட்டபூர்வமாக எதிர்கொள்வோம் என்றும் ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். தவறு செய்பவர்கள் தான் பயப்பட வேண்டும் நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கிராமங்களில் வீட்டு வரி உயர்வு.. இது தான் அலங்கோல ஸ்டாலின் ஆட்சி.. இபிஎஸ் பாய்ச்சல்..!
இதையும் படிங்க: டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்..! மேளதாளம் முழங்க MASS வரவேற்பு..!