தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!
அச்சுறுத்த நினைத்தால் திராவிட முன்னேற்றக் கழகம் அமைதியாக இருக்காது என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள தவெக ஆட்சியின் கீழ், எதிர்க்கட்சியான தி.மு.க.வின் இளைஞர் அணியுடன் தொடர்புடைய ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள தனது சொந்த கிராமத்தில் DMK Gen Z wing-இன் ஒருங்கிணைப்பாளரான அன்பானந்தன் அரியப்பனை கைது செய்ய போலீசார் முயற்சி செய்ததாகக் கூறப்படும் சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அன்பானந்தன் அரியப்பன் DMK-வின் Gen Z இளைஞர்களை தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைத்து கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளை நடத்தி வருபவர். அண்மையில் நடைபெற்ற DMK Gen Z meet-up நிகழ்வுகளின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக அவர் செயல்பட்டார். இளைஞர்களிடையே திராவிட இயக்க கொள்கைகளை எடுத்துச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அவர், சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். கழகத்தின் GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிப்பதாக கூறினார். இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: உங்க கையில என்னப்பா.? முதல்வர் ஸ்கிரிப்ட் பார்த்து பேசுகிறார்..! உதயநிதி குற்றச்சாட்டுக்கு தவெக கேள்வி..!
கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது. தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா? என்று கேள்வி எழுப்பினார். கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: சிங்கப்பெண்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம்..! டென்ஷன்-ஆன அமைச்சர் ராஜ்மோகன்..!!