×
 

இபிஎஸ் அடிமை… என்ன பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு உதயநிதி? தொண்டர்கள் ஷாக்…!

பாஜகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி அடிமையாக கிடைத்தது போல் வேறு யாராவது கிடைப்பார்களா என வலைவீசி தேடி வருவதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.

திண்டுக்கல்லில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது, பல்வேறு நலத்திட்டங்களை செய்து இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துக்காட்டாக விளங்கி வருவதாகவும், பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதன்மையாக திகழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் சங்கிகளுக்கும், அடிமைகளுக்கும், பாசிஸ்டுகளுக்கும் வைத்தெரிச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எப்படியாவது இந்த அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு திட்டங்களை தீட்டிக்கொண்டு வருவதாக கூறினார். ஏற்கனவே பாஜகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி என்ற அடிமை சிக்கி இருப்பதாகவும், வேறு ஏதாவது அடிமை சிக்குமா என பாஜக வலை வீசி தேடி வருவதாகவும் விமர்சித்தார்.

பாஜக-விற்கு புது அடிமைகள் நிச்சயம் கிடைப்பார்கள் என்றும் ஆனால் எத்தனை அடிமைகள் ஒன்றுசேர்ந்து வந்தாலும், திமுகவின் கடைசி தொண்டன் இருக்கும் வரை அவர்களால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது எனவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்கள் இருக்கும் வரை நிச்சயம் பாஜகவின் எண்ணம் பலிக்காது என்றும் ஒவ்வொரு திமுக தொண்டரும் ஓட ஓட விரட்டுவார்கள் என்று பேசினார். 

இதையும் படிங்க: திமுகவை பாராட்ட போட்டி போடும் பாமக எம்எல்ஏக்கள்… துணை முதல்வர் உதயநிதி பேச்சு

பாஜகவால் கல்வி உரிமை பறிக்கப்படுவதாகவும், நிதி உரிமை பறிக்கப்படுவதாகவும், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தொகுதி மறு வரையறை கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் புதிய கல்விக் கொள்கையின் மூலம் ஹிந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: வெடிச்சு சிதற போகுது... முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share