திக்கு தெரியாமல் இருந்தோம்..! நன்றி விஜய்..!! முதல்வருக்கு புகழாரம் சூட்டிய உடுமலை ராதாகிருஷ்ணன்..!
தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டதற்கு முதல்வர் விஜய்க்கு உடுமலை ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.
2021 தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, 2026 சட்டமன்ற தேர்தலில் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. இதற்கிடையில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக கட்சியின் பிளவு மற்றும் அதிருப்தி உள்ளிட்டவை காரணமாக பிளவுபட்டு வருகிறது. பல்வேறு அதிமுகவினர் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியமாகி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியம் ஆகினர். மேலும் ஏராளமான அதிமுகவினர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
அப்போது, தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார். ஜெயலலிதாவால் கட்டுப்பாட்டுடன் உருவாக்கப்பட்டவன் நான் என்று குறிப்பிட்டு பேசினார். எங்கே செல்வது என திக்கு தெரியாமல் திரிந்தோம் என்றும் கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய கஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: என்ன பேச்சு இதெல்லாம்..? அமைச்சர் நிர்மல் குமார் கருத்து..! போர்க்கொடி தூக்கிய தமிழிசை..!!
நமது எதிரியான திமுகவை எதிர்க்கும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தருவோம் என்று ஏற்கனவே பேசினோம் எனவும் கூறினார். ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் விஜய் செயல்படுவது உறுதியாகிவிட்டது என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார். ஜெயலலிதாவை போன்று தமிழக முதலமைச்சரின் விஜயை மக்கள் பார்ப்பதாகவும் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக தமிழக வெற்றி கழகத்திற்காக பணியாற்றுவோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: காலியாகும் அதிமுக கூடாரம்..? முக்கிய தலைகள் தவெகவில் ஐக்கியம்..!!