சென்னை மக்களே ரெடியா?... நாளை இங்க எல்லாம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடக்கப் போகுது...!
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (22.08.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட எந்தெந்த பகுதிகளில் நடைபெறவுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (22.08.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-11ல் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள ஶ்ரீராம் தயாள் கேம்கா விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லூரி, மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-21ல் பாடசாலை தெருவில் உள்ள ஜெயம் மஹால், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-30ல் கொளத்தூர், கல்பாளையம் லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது.
பெரம்பூர் ரெட்ஹில்ஸ் நெடுஞ்சாலையில் உள்ள ஶ்ரீசெல்வலட்சுமி திருமண மண்டபம், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-39ல் புதுவண்ணாரப்பேட்டை, செரியன் நகரில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி மைதானம், திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-71ல் பெரம்பூர், பள்ளி சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-88ல் பாடி, டி.வி.எஸ். நகர் 2வது தெருவில் உள்ள அன்னை மண்டபம், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-108ல் சேத்துப்பட்டில் நடக்கவுள்ளது.
இதையும் படிங்க: அடேங்கப்பா..!! 30 நாளில் இத்தனை லட்சம் மனுக்களா..!! வெற்றிநடைபோடும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்..!
மேயர் ராமநாதன் சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடல், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-118ல் இராயப்பேட்டை, ஶ்ரீநிவாச பெருமாள் சன்னதி தெருவில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-146ல் மதுரவாயல், பி.எச். சாலையில் உள்ள சீதாலட்சுமி திருமண மண்டபம், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-159ல் மீனம்பாக்கம், காமராஜர் சாலையில் உள்ள ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15), வார்டு-195ல் துரைப்பாக்கம், ஏலீம் மெட்ரிகுலேசன் பள்ளி ஆகிய 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: #உங்களுடன் ஸ்டாலின்! உயர் நீதிமன்ற ஆணைக்கு இடைக்கால தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!