×
 

#உங்களுடன் ஸ்டாலின்! உயர் நீதிமன்ற ஆணைக்கு இடைக்கால தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம், தமிழ்நாட்டின் கடைகோடி மக்களுக்கு அரசு சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் வழங்குவதை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்லாமல், அவர்களது வீட்டு வாசல்களுக்கு அருகிலேயே சேவைகளை வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும். 

இந்தத் திட்டத்தின் பெயர் மற்றும் விளம்பரங்களில் முதலமைச்சரின் பெயர் மற்றும் முன்னாள் முதலமைச்சரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: சென்னையில் நாளை இந்த ஏரியாக்களில் முகாம்.. பயன்படுத்திக்கோங்க மக்களே..!!

இந்த வழக்கில், அரசு திட்டங்களில் ஆளுங்கட்சியின் தலைவர்களின் பெயர்களையோ, முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்களையோ, கட்சி சின்னங்களையோ பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என்று வாதிடப்பட்டது. 

தமிழக அரசு தொடங்கும் புதிய திட்டங்கள் மற்றும் விளம்பரங்களில் முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு இடைக்கால தடைக்காக அமைந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரித்த உச்ச நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டது. தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

மேலும் அரசியல் சண்டைகள் தேர்தல் களத்தில் தான் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து மனுவை போட்டதை தாங்கள் ஏற்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.  மேலும் வழக்கை தாக்கல் செய்த சிவி சண்முகத்துக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன் இருந்த முதல்வர்களின் பெயர் கொண்ட திட்டங்கள் பட்டியல் தங்களிடம் உள்ளது என்று கூறிய உச்சநீதிமன்றம், நாகரீகம் கருதி அதனை படிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் நாளை 6 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்.. எந்தெந்த ஏரியா தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share