இனி சிரமமே இல்ல.. 45 நாட்களில் தீர்வு.. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கவும், சேவைகளை மக்களின் நிலங்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்ப்பதும் முக்கிய நோக்கமாக கொண்டு உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அரசின் திட்டங்கள் மக்களை உடனடியாக செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வரின் முகவரி திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோரின் குறைகள் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் விடுபட்டவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புறங்களாக இருந்தால் 13 துறைகள் மூலமாக 43 சேவைகள் வழங்கப்பட உள்ளதாகவும், சிலவற்றை ஓரிரு நாளிலும் அதிகபட்சமாக 45 நாளிலும் சேவைகள் சரி செய்து கொடுக்கப்படும் என்றும் கிராமப்புறங்களில் 15 துறைகள் மூலமாக 46 சேவைகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.
பத்தாயிரம் மக்கள் தொகைக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், முதல் கட்டமாக 3563 முகங்கள் நடக்க திட்டமிட்டுள்ளதாகவும், வாரத்திற்கு நான்கு நாட்கள் முகாம்கள் நடைபெறும் என்றும் இதற்காக பிரத்தியேக வலைத்தளம் ஒன்றும் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் தெரிவிக்கப்பட்டது. இந்த முகாம்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என வாரத்திற்கு நான்கு நாட்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நவம்பர் மாதம் இறுதி வரை இந்த முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவையும் அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமித்துள்ளனர்.
இந்த குழுவினர் திட்டம் மக்களிடம் சென்று சேருவதை உறுதிப்படுத்த உள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனிடையே, மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே முகாம் நடத்தி 45 நாட்களில் தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: நல்ல வேளை சோறு போட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்க அன்று ஆளில்லை! முதல்வர் சாடல்..!
இதையும் படிங்க: செய்தி தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள்... எங்க போகுது திராவிட மாடல் அரசு? தமிழிசை சரமாரி கேள்வி..!