×
 

அனைத்து அரசு சேவையும் ஒரே இடத்தில்..!! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!!

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த ஜூலை 15-ஆம் தேதி கடலூரில் தொடங்கப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், மக்களுக்கு அரசு சேவைகளை வீடு தேடி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மகத்தான முயற்சியாகும். இத்திட்டம், 15 துறைகளை உள்ளடக்கி, 46 கிராமப்புற சேவைகள் மற்றும் 43 நகர்ப்புற சேவைகளை வழங்குகிறது.

பட்டா மாறுதல், ரேஷன் அட்டை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல சேவைகள் இதில் அடங்கும். மக்களின் அன்றாட தேவைகளை எளிதாக்குவதற்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உடனடி தீர்வு காண முடியாத பிரச்சினைகளுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: எல்லா வேலையும் கரெக்ட்டா நடக்குதா..?? ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் துணை முதல்வர்..!!

இத்திட்டம், குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற தவறிய பெண்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இதனை “புரட்சிகரமான திட்டம்” என வர்ணித்து, இது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசு நிர்வாகத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறது எனக் குறிப்பிட்டார். இத்திட்டம், தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்டு, குறிப்பாக பின்தங்கிய பிரிவினருக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, திமுக அரசின் மக்கள் நல முயற்சிகளில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (24.09.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது. திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-9ல் திருவொற்றியூர் குப்பம், சென்னை தொடக்கப்பள்ளி அருகில் உள்ள துலுகானத்தம்மன் கோவில் தெரு, மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-23ல் மேற்கு காவாங்கரையில் உள்ள ராணி சங்குபதி திருமண மண்டபம், ராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-57ல் சௌகார்பேட்டை, அண்ணா பிள்ளை தெருவில் உள்ள சந்திரபுரி டிரஸ்ட் மண்டபம், திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-78ல் சூளை, சச்சிதானந்தம் தெருவில் உள்ள அறிஞர் அண்ணா மாளிகை சமுதாயக் கூடம், அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-89ல் முகப்பேர் பிரதான சாலையில் உள்ள சின்னசாமி திருமண மண்டபம், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), 

வார்டு-104ல் ஐ பிளாக் 28வது தெருவில் உள்ள கம்பர் குடியிருப்பு குழந்தைகள் விளையாட்டுத் திடல், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-117ல் தியாகராயநகர், கிரியப்பா சாலையில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்–10) வார்டு-132ல் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள சமுதாயக் கூடம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-146ல் மதுரவாயல், பி.எச். சாலையில் உள்ள சீதாலட்சுமி திருமண மண்டபம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-183ல் பாலவாக்கம், வி.ஜி.பி. லேஅவுட் 2வது பிரதான சாலையில் உள்ள வி.ஜி.பி. லேஅவுட் பார்க், சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்–15) வார்டு-198ல் கிராம நெடுஞ்சாலையில் உள்ள செல்லியம்மன் கோவில் மண்டபம் ஆகிய 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 

இதையும் படிங்க: நாளை 10 வார்டுகள்.. எங்கெங்க தெரியுமா..?? உங்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share