பெரியார் பெயருடன் சாதி.. யுபிஎஸ்சி தேர்வில் சர்ச்சை கேள்வி.. வலுக்கும் கண்டனம்..!
யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் பெயருடன் சாதிப் பெயர் இடம் பெற்றிருந்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தீர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. சென்னையில் 69 மையங்களில் தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டன. சென்னையில் உள்ள தீர்வு மையங்களில் 24, 364 பேர் முதல்நிலை தேர்வு எழுதினார்கள்.
தேர்வு முடிந்த நிலையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. யுபிஎஸ்சி தேர்வில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார் என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதிலால் சர்ச்சை எழுந்தது. கேள்வித்தாளில் நான்கு விடைகளில் ஒன்றில் பெரியார் பெயருடன் அவரது சாதி பெயரையும் இணைத்து வெளியிட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்.. அடிச்சு தூக்க போகுது மழை..! கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்..!
இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் மதிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலுக்கு பெரியாரிய இயக்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதையும் படிங்க: செம்ம மழை காத்திருக்கு..! இந்த மாவட்ட மக்கள் உஷாரா இருந்துக்கோங்க..!