×
 

H1B விசா கட்டண உயர்வு.. மருத்துவர்களுக்கு விலக்கா..?? பரிசீலிக்கும் அமெரிக்கா..!!

எச்-1பி விசா கட்டண உயர்வில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய உத்தரவால் H-1B விசா விண்ணப்பங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் (சுமார் 88 லட்சம் ரூபாய்) கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எச்1பி விசாக்களுக்கான கட்டணம் ரூ.1.32 லட்சமாக இருந்த நிலையில், அது இப்போது ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்திய ஐடி தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த புதிய கட்டணம் கடந்த 21ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதிபர் டிரம்ப்பின் இந்த நடவடிக்கை, தற்போது இந்த விசாவை வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த கட்டண உயர்வு என்பது புதிய விசா கோரும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே என்று அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது. H-1B விசா, அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்ப துறைக்கு சிறப்பு திறன்களை கொண்ட பணியாளர்களை ஈர்க்கும் முக்கிய கருவியாகும். ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் 85,000 விசாக்களில் 71-72% இந்தியர்களுக்கே கிடைக்கின்றன.

இதையும் படிங்க: மறுபடியும் சொல்றேன்.. வீக்கான பிரதமர்: H1B விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சனம்..!!

புதிய கட்டணம் காரணமாக, புதிதாக விண்ணப்பிக்கும் இளம் பொறியாளர்கள் பெரும் நிதி சுமையை சந்திக்க வேண்டியிருக்கும். இது குடும்பங்களுக்கு பெரும் சவால்களையும் ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு உள்ளூர் ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. சிலர் விசா புதுப்பிப்புகளை விரைவுபடுத்த அறிவுறுத்துகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் அறிமுகப்படுத்திய எச்-1பி விசா தொடர்பான 1 லட்சம் டாலர் கட்டண உயர்வில் இருந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தேசிய சுகாதாரத் தேவைகளை கருத்தில் கொண்டு, குறிப்பாக கிராமப்புறங்களில் மருத்துவர்கள் குறைவாக உள்ள பகுதிகளில் சேவையை பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உயர்வு அறிவிக்கப்பட்ட உடனேயே, அமெரிக்க மருத்துவ சங்கம் (AMA), அமெரிக்க மருத்துவமனை சங்கம் (AHA) போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தக் கட்டணம், குறிப்பாக கிராமப்புறங்களில் மருத்துவ சேவையை பெரிதும் பாதிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 25% சர்வதேச பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியர்கள் 22% பங்களிக்கின்றனர், இது மொத்த மருத்துவர்களில் 5-6% ஆகும்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறும்போது, அதிபர் டிரம்ப்பின் விசா கட்டண உயர்வில் சில விலக்குகள் அளிக்கப்பட்ட உள்ளன. அதில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்குவர் என்று தெரிவித்தார். பாதிக்கும் என்ற கருத்துகள் எழுந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

இந்த முடிவு, அமெரிக்காவின் சுகாதாரத் தேவைகளை சமநிலைப்படுத்தும் முதல் அடி என நிபுணர்கள் கருதுகின்றனர். கிராமப்புற சுகாதாரப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இது உதவும். ஆனால், IT துறைக்கு இன்னும் சவால்கள் உள்ளன. 

இதையும் படிங்க: H1B விசாவிற்கு போட்டியாக K விசா... சீனாவின் புதிய TRICKS...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share