பாகிஸ்தான் மூக்கறுப்பு! ட்ரம்ப் செய்த தரமான சம்பவம்!! இந்தியாவுடன் கைகுலுக்கியதும் அதிரடி காட்டிய அமெரிக்கா!
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அரசுத்துறை வெளியிட்ட இந்திய வரைபடம் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்ட வரைபடம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் முழுவதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (PoK) உட்பட, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காட்டப்பட்டுள்ளது. சீன ஆக்கிரமிப்பில் உள்ள அக்சய் சின் பகுதியும் இந்திய நிலப்பரப்பாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதுவரை அமெரிக்க அரசுத்துறை வரைபடங்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் நிலைப்பாட்டுக்கு ஏற்ப PoK-ஐ தனியாகக் காட்டி வந்தன. இந்தியா தொடர்ந்து இதை எதிர்த்து வந்தாலும், அமெரிக்கா அதை கண்டுகொள்ளவில்லை. இப்போது முதல் முறையாக USTR வரைபடம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. இது வர்த்தக ஒப்பந்தத்தின் பகுதியாக வெளியான அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
இந்த வரைபடம் பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் மூன்று முறை அமெரிக்கா சென்று டிரம்ப் அரசை அணுகியுள்ளார். பாகிஸ்தான் அரசு டிரம்புக்கு நோபல் அமைதி பரிசு பரிந்துரை செய்தது. இத்தகைய முயற்சிகள் அனைத்தும் இப்போது வீணாகியுள்ளன என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்! நமக்கு என்ன லாபம்? உலகமே கவனிக்கும் டீல்! 12 முக்கிய அம்சங்கள்!!
நெட்டிசன்கள் இந்த வரைபடத்தை "சரியான இந்திய வரைபடம்" என்று பாராட்டி வருகின்றனர். இது அமெரிக்காவின் இந்தியா மீதான நிலைப்பாட்டில் மாற்றத்தை காட்டுவதாகவும், டிரம்ப் அரசின் தனிப்பட்ட ஆதரவை வெளிப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. வர்த்தக ஒப்பந்தத்துடன் இணைந்து வெளியான இந்த வரைபடம், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதை உலக அளவில் உறுதிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
இந்தியா தொடர்ந்து "ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி" என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறது. அமெரிக்காவின் இந்த வரைபடம் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அமைந்துள்ளது.
இது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இதற்கு இதுவரை அதிகாரப்பூர்வ எதிர்வினை வரவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும்! வரிகள் பூஜ்யமாகும்! இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! பியூஸ் கோயல் நம்பிக்கை!