ஆத்திச்சூடியே அறியாதவர் விஜய்... கானல் நீராய் தான் போகும்... வைகோ பதிலடி...!
பொதுக் குழு கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய்க்கு வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று நடந்த தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். கரூர் சம்பவம் நடந்த 40 நாட்கள் கழித்து விஜய் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதை சுட்டிக்காட்டி விமர்சித்து இருந்தார்.
பெருந்தன்மையை பெயரளவில் மட்டுமே பேசுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் கரூர் விவகாரம் குறித்த சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் வன்மத்தை கக்கி உள்ளார் எனவும் தெரிவித்தார். அரசியல் காழ்ப்புடன், நேர்மையில்லாமல், குறுகிய மனதுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார் என்றும் 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது பொய் எனவும் தெரிவித்தார்.
வன்ம அரசியல், அர்த்தமற்ற அவதூறை சட்டம் மற்றும் சக்தியின் துணை மூலம் துடைத்தெறிய போகிறோம் என்று கூறிய விஜய், உச்சபட்ச அதிகார மயக்கத்தில் இருந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினாரா என்று கேள்வி எழுப்பினார். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்ற அறிக்கையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் விஜய் பேசி இருந்தார்.
இதையும் படிங்க: வன்மத்தை கக்கிட்டீங்க முதல்வரே..! தோல்வி அறிக்கை ரெடியா! போட்டி தரமா இருக்கும்… விஜய் ஃபயர் ஸ்பீச்…!
அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்தார். பொது வாழ்வில் ஆத்திச்சூடியே அறியாதவர் விஜய் என்றும் காகித கப்பலில் கடல் தாண்ட முனைகிறார் எனவும் விமர்சித்தார். ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார் விஜய் என்று கூறிய வைகோ அவரது நம்பிக்கைக்கனவுகள் கானல் நீராகி போய்விடும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரூர் கோரச்சம்பவம்… 41 பேருக்கு இரங்கல் தெரிவித்து தவெக பொதுக்குழுவில் தீர்மானம்…!