வன்மத்தை கக்கிட்டீங்க முதல்வரே..! தோல்வி அறிக்கை ரெடியா! போட்டி தரமா இருக்கும்… விஜய் ஃபயர் ஸ்பீச்…!
கரூர் சம்பவம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதிலடி கொடுத்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது பேசியதாவது; என்னுடைய தோழர் தோழிகள் தமிழக மக்களுக்கு வணக்கம். குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையில் இருக்கிறோம். பெருந்தன்மையை பெயரளவில் மட்டுமே பேசுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கரூர் விவகாரம் குறித்த சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் வன்மத்தை கக்கி உள்ளார். அவருக்கு நாகரிகமாக பதிலடி கொடுக்க விரும்புகிறேன். இந்தியாவில் எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அரசியல் காழ்ப்புடன், நேர்மையில்லாமல், குறுகிய மனதுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார். பிரச்சாரத்திற்கான இடத்தேர்வு குறித்து கடைசி வரை இழுத்தடித்து வந்தார்கள். கரூர் சமூகத்திற்கு பிறகு அவசர அவசரமாக தனிநபர் ஆணையம் அமைத்தார். தனிநபர் ஆணையத்தை மறந்து அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசி வந்தனர்.
தனிநபர் ஆணையத்தை தலையில் குட்டு வைத்தது உச்சநீதிமன்றம். வடிகட்டிய, சப்பை கட்டிய பொய் என உச்ச நீதிமன்றம் கூறியது. 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது பொய். வன்ம அரசியல், அர்த்தமற்ற அவதூறை சட்டம் மற்றும் சக்தியின் துணை மூலம் துடைத்தெறிய போகிறோம். எஸ் ஐ டி அமைத்த உயர் நீதிமன்ற உத்தரவை கொண்டாடினார்கள்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 4 முனை போட்டி! தவெக தலைமையில் தான் கூட்டணி...! யாருக்கு பாதகம்?.
உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளால் வாயடைத்து போனதாக சைகை செய்தார். உச்சபட்ச அதிகார மயக்கத்திலிருந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினாரா என்று கேள்வி எழுப்பினார். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்ற அறிக்கையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். திமுக மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை புதைந்து விட்டது. இப்போதும் சொல்கிறேன் திமுக- தவெக இடையில் தான் சட்டமன்ற தேர்தலில் போட்டி. இவ்வாறு விஜய் பேசினார்.
இதையும் படிங்க: விஜய் தான் முதல்வர் வேட்பாளர்… விஜய்க்கே முன்னுரிமை… தவெக பொதுக் குழுவில் தீர்மானம்..!