"வேணாம்"..! புதிய நடுவர் மன்றத்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு..! வைகோ எச்சரிக்கை..!
புதிய நடுவர் மன்றத்தால் தமிழ் நாட்டுக்கு பாதிப்பு என வைகோ தெரிவித்துள்ளார்
மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நீர்வள ஆணையம், 2018 நவம்பர் 22 தேதியிட்டு கர்நாடக மாநிலத்திற்கு அனுமதிக் கடிதம் ஒன்றை அனுப்பியது என்றும் கர்நாடக அரசின் நிறுவனமான பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட கர்நாடக காவிரி நீராவரி நிகம், லிமிடெட்டின் நிர்வாக இயக்குநருக்கு அனுப்பப்பட்டு, “மேகேதாட்டு சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம்” குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நீரை தாங்கள் விரும்பும் வகையில் பயன்படுத்தும் சுதந்திரம் உண்டு என்றும் அமர்வு கூறியது என்றும் ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து மற்ற மாநிலங்களுக்கு தலையிடும் உரிமை இல்லை. ஆனால், அத்தகைய நடவடிக்கைகள் மற்றொரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவை குறைக்கும் நிலை ஏற்பட்டால் மட்டும் தலையீடு செய்யலாம்” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது எனவும் தெரிவித்தார்.
மேகதாது திட்டம் தொடர்பாக தமிழ்நாடு தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளது என்று கூறியுள்ளஇது கர்நாடகத்திற்கு நல்ல செய்தி. கர்நாடக மக்களின் சார்பில் உச்சநீதிமன்றத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அப்போதைய துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான சிவக்குமார் கூறியதையும் வைகோ சுட்டி காட்டினார்.
இதையும் படிங்க: அமோனியா வாயு கசிவு.. விசாரணைக் குழு பரிந்துரைகளை கவனிக்கணும்..! வைகோ வலியுறுத்தல்..!!
இந்த நிலையில் மேகதாது அணை கட்டுவதா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்க புதிய நடுவர் மன்றம் கோருவதே நாம் இதுவரையில் எடுத்து வந்த நிலைப்பாட்டிற்கு பாதகம் விளைவிக்கும் நடவடிக்கை. கர்நாடக மாநிலத்திற்கு இந்தப் பிரச்சினையில் ஒரு வாய்ப்பை அளிப்பதாக அமைந்துவிடும் என்று கூறியுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க முந்தைய அரசு எதன் அடிப்படையில் கோரிக்கை வைத்தது? ஏன் வெளிப்படையான அறிவிப்பு செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது என்று கூறினார். தமிழ்நாடு அரசு மேகதாட்டு அணைப் பிரச்சனையில் தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் விவசாய சங்கங்களையும் பங்கேற்க செய்து, கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: வைகோவுக்கு தவெக அரசில் முக்கிய பதவி! முதல்வர் விஜயுடன் 40 நிமிட ஆலோசனை! ஃபைனலானது டீல்!!