×
 

தவெக அரசு மீது விஷக் கணைகள்... கூட்டணி கட்சிகளும் தான் காரணம்.. வைகோ விமர்சனம்..!

தவெக அரசு மீது விஷ ஏவுகணைகள் ஏவப்படுவதாக வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ள மாற்றங்களில் ஒன்று, மதிமுக தலைவர் வைகோவின் திமுக கூட்டணியிலிருந்து விலகல் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர், முதலமைச்சர் விஜய் மீதான அவரது ஆதரவு நிலைப்பாடு. வைகோ, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி வட்டாரங்களிலிருந்தும் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அரசுக்கு எதிராக "விஷ ஏவுகணைகள்" ஏவப்படுவதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சியின் போது இத்தகைய தாக்குதல்கள் எங்கே சென்றன என்று கேள்வி எழுப்பிய அவர், விஜய்யின் தலைமையை பாராட்டியும் பேசியுள்ளார். வைகோவின் கருத்துப்படி, யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு வலிமையாக இருந்த அதிமுக மற்றும் திமுகவை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தரைமட்டமாக்கி முதலமைச்சராக உயர்ந்தவர் விஜய்.

இந்தச் சூழலில் தனது சுயமரியாதையைப் பாதுகாக்க திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்தார். இந்த முடிவு மதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்டது. திமுகவுடன் நீண்ட காலம் இணைந்திருந்தாலும், அண்மையில் ஏற்பட்ட மரியாதைக் குறைவு, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பிரச்சினைகள் இந்தப் பிரிவுக்கு வழிவகுத்தன என்பது வைகோவின் வாதம்.

இதையும் படிங்க: 30 ஆண்டுகால நாடாளுமன்ற உரைத் தொகுப்பு..! தலைமைச் செயலகத்தில் விஜய் - வைகோ சந்திப்பு..!

தவெக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டிய வைகோ, ஊழல் மற்றும் கமிஷன் கலாச்சாரத்தை ஒழித்ததாகக் கூறினார். இந்த அரசு ஜனநாயகத்தின் இரு பெரும் தீமைகளான ஊழல் மற்றும் கமிஷனிலிருந்து விடுபட்டுள்ளது என்று வலியுறுத்தினார். முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பல விவகாரங்களை விவாதித்ததாகவும், வரும் இடைத்தேர்தல்கள் உள்ளிட்டவற்றில் தவெகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்தார். திமுகவுக்கு எதிராக வைகோ கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

 

இதையும் படிங்க: "என் அரசியல் வாழ்க்கையின் பெருந்தவறு"... வைகோ ஓபன் டாக்..! திமுக மீது விமர்சனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share