×
 

முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

முதல்வர் விஜய்யை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார்.

தமிழக அரசியலில் புதிய கூட்டணி உருவாக்கத்துக்கான முக்கிய சமிக்ஞையாகக் கருதப்படும் வகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று முதலமைச்சர் விஜயை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற இந்த சந்திப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வைகோவை சந்தித்து பேசிய நிலையில், இன்று முதலமைச்சருடனான நேரடி சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தத் தொடர் சந்திப்புகள் மதிமுகவின் எதிர்கால அரசியல் நகர்வுகளுடன் தொடர்புடையதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். குறிப்பாக, வரும் 27ம் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி குறித்த முடிவுகள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள், அரசியல் கூட்டணி வாய்ப்புகள் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றிருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க: அரசியலில் அதிரடி திருப்பங்கள்..! தவெகவுடன் கூட்டணியா..? முதல்வர் விஜயை சந்திக்கும் வைகோ..!!

தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் விஜய், பல்வேறு கட்சித் தலைவர்களுடன் தொடர்புகளை வலுப்படுத்தி வரும் சூழலில், வைகோவின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மதிமுக நிர்வாகிகள் சிலர் த.வெ.க. உடன் கூட்டணி வலியுறுத்தி வரும் பின்னணியில் இந்த சந்திப்பு அமைந்துள்ளது. திராவிட இயக்கங்களின் பாரம்பரியம் மற்றும் தமிழக அரசியலின் எதிர்காலம் குறித்து இரு தலைவர்களும் விரிவாக உரையாடியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைட்ரோ கார்பன் விவகாரம் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: மதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் திட்டம்?! வைகோ முடிவுக்காக காத்திருப்பு! தவெக தாவினால் க்ளோஸ்!?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share