×
 

#BREAKING: வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்..! சோகத்தில் மூழ்கிய அதிமுக தொண்டர்கள்..!

வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் காலமானார்.

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த அமுல் கந்தசாமி வால்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார். 2021 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எதிர்த்து நின்ற அமுல் கந்தசாமி 1,371 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். 

இந்த நிலையில், வால்பாறை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 60. கடந்த இரண்டு மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று விசாரித்து இருந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவர் கோமாநிலைக்கு சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்எல்ஏ அமுல் கந்தசாமியின் மறைவுக்கு அதிமுகவினரும் பொது மக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share