வயித்துல நெருப்ப கட்டிட்டு இருக்கோம்! மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்! விளாசிய வானதி...!
தமிழக மகளிரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், தப்பியோடிய 3 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்தன.
சம்பவம் நடந்த இடத்தில் காரில் இருந்து துப்பட்டா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் தடையவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து, கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குணா, சதீஷ், கார்த்திக் ஆகிய 3 பேர் போலீஸாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் வானத்தை ஸ்ரீனிவாசன் வலியுறுத்தினார். கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வழக்கில் குற்றவாளிகளை காலில் சுட்டுப் பிடித்திருக்கிறது தமிழக காவல்துறை என்று குறிப்பிட்டார்.
ஒரு கொடூரம் நிகழ்ந்த பின் மட்டும் வேகம் காட்டும் திமுக அரசின் காவல்துறை, முன்னரே விழிப்புடன் செயலாற்றி இருந்தால் ஒரு பெண் பாதுகாப்பாக இருந்திருப்பாரே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பல பெண்கள் தைரியமாக படிக்கவும் கல்வி கற்கவும் வெளியில் வந்திருப்பரே என்றும் பெண் பிள்ளைகளைப் பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமிருந்திருக்காதே எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குன்னூரில் ஒரே வீட்டில் 79 ஓட்டுகளா? சர்ச்சை... TN FACT CHECK கொடுத்த விளக்கம்...!
ஆட்சிக் வருவதற்கு முன் இரும்புக் கரம் என்று போலியாக முழங்கிவிட்டு, ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் நான்காண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை 60% பெருகவிட்டு, இது போன்ற கொடூரம் நிகழும் போதெல்லாம், இரும்பு மனது மட்டும் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அமைதி காப்பதாக கூறினார். இனியொரு முறை துருப்பிடித்த கரத்தை வைத்துக் கொண்டு வீரவசனம் பேச நாணுங்கள் என்றும் பாதுகாப்பற்ற ஒரு சூழலை உருவாக்கியதற்கு தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொன்முடிக்கு மீண்டும் கட்சிப் பதவி... நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளும் திமுக...!