ஒவ்வொரு வருடமும் வெள்ளை அறிக்கை குடுங்க.. வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!
ஆண்டுதோறும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.
வெள்ளை அறிக்கை தமிழக மக்களை ஏமாற்றும் நாடகமாக இருந்து விடக்கூடாது எனவும் சொல்லில் அல்ல., செயலில் தமிழ்நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்திக் காட்ட வேண்டும் என்றும் பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் கடந்த ஐந்தாண்டு கால நிதி நிலவரம் குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே நிதி மேலாண்மையில், தமிழ்நாடு மிகச் சிறந்து விளங்குவதாகவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதாகவும் பேசுவதை முந்தைய ஆட்சியாளர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்றும் கூறினார். சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த மாநிலம். தமிழர்களின் கடும் உழைப்பும், தொழில் திறனும், புதிய புதிய முயற்சிகளும், அறிவாற்றலும் தான் இதற்கு காராணம் என்றார்.
கடன் வாங்கிய பணத்தை இலவச திட்டங்களுக்கும், வீண் விளம்பரங்களுக்கும் தான் திமுக அரசு வாரி இறைத்தது. அது மட்டுமல்லாது, திமுக ஆட்சியில் எங்கும் எதிலும் ஊழல் நிறைந்திருந்ததால் கடன் சுமையும் அதிகரித்துக் கொண்டே சென்றது என்றும் கூறினார். இப்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, பதவியேற்ற 37வது நாளில் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: காமுக அரக்கர்களின் கைகளில் சிக்கும் பிஞ்சு குழந்தைகள்..!! கடும் நடவடிக்கை எடுக்கணும்..!! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!!
மக்களை திசை திருப்புவதற்காக வெள்ளை அறிக்கை நாடகத்தை த.வெ.க. அரசு அரங்கேற்றியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும், மீண்டும் ஒருமுறை உண்மை வெளிவந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார். இனி ஆண்டுதோறும் தமிழகத்தின் நிதி நிலையை மேம்படுத்தவும், கடன் சுமை குறைக்கவும் என்னென்ன செய்தோம்., அதற்கு எந்த அளவுக்கு பலன் கிடைத்துள்ளது என்பது பற்றி வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: "ஆச்சரிய குறிகளா.? ஆபாச பொறுக்கிகளா"..? என்ன நடக்குதுன்னு தெரியுமா விஜய்..? வானதி சீனிவாசன் விளாசல்..!!