×
 

1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

அண்ணாமலைக்கு தொகுதியை விட்டுக் கொடுக்க தாயாரா? என்ற கேள்விக்கு - கற்பனை சிறகை பறக்க விடுங்கள் என்றார். 

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தனது தேர்தல் பணிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் குறித்துப் பல்வேறு முக்கியத் தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், கோவையில் அக்கட்சியின் செல்வாக்கு மிகுந்த தொகுதிகளைத் தக்கவைக்கத் தீவிரமான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

எந்தத் தேர்தலாக இருந்தாலும் நான் முழுமையாகப் பணியாற்றுவேன்; எனது உழைப்பு 100 சதவீதத்தில் ஒரு சதவீதம் கூடக் குறையாது, என்று அவர் தொண்டர்களிடையே உற்சாகத்தைப் பாய்ச்சினார்.

இதையும் படிங்க: "குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?" - மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

கோவை தெற்கு தொகுதியைத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்காக விட்டுக் கொடுக்கத் தயாரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, உங்கள் கற்பனைச் சிறகுகளைப் பறக்க விடுங்கள், என்று சுவாரசியமான பதிலைத் தந்து மர்மம் நீடிக்கச் செய்தார்.

பாஜகவின் வேட்பாளர் பட்டியலைத் தேசியத் தலைமைதான் இறுதி செய்து அறிவிக்கும் என்றும், அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதால் இன்னும் ஓரிரு நாட்களில் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே அண்ணாமலை அவர்கள் இத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும், தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் பியூஷ் கோயலிடம் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வானதி சீனிவாசன் மீண்டும் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்பாரா அல்லது அண்ணாமலையின் ஆதரவாளர்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: எனக்கு வேண்டாம்... என் ஆதரவாளர்களுக்கு கொடுங்கள்! அண்ணாமலையின் அதிரடி 'சீட்' கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share