×
 

திக்.. திக்.. நிமிடங்கள்..! தவெக அரசுக்கு காங்., CPM, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு..! வன்னியரசு கருத்து..!

தமிழக வெற்றி கழக அரசுக்கு காங்கிரஸ், சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மூன்றாவது நாள் அமர்வு தொடங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது, ஏனெனில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த திராவிடக் கட்சிகளின் மாற்று ஆட்சி முறையை உடைத்து புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. 

108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை  நிரூபிக்க 118 இடங்கள் தேவைப்பட்டது. தமிழக வெற்றி கழகம் அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு என்று சட்டமன்றத்தில் நடைபெறுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக அரசுக்கு விசிக கட்சி ஆதரவாளிப்பதாக பேரவையில் விசிக சட்டமன்ற குழு தலைவர் வன்னியரசு அறிவித்தார். விஜய் தலைமையிலான தாவைக்க அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் எனக்கொரு ஆதரவு தெரிவித்தார். நம்பிக்கை குரல் வாக்கெடுப்பில் காங்கிரஸ் சிபிஎம், IUML உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் சூழல்... முதல்வராக தொடர்வாரா விஜய்..? தொடங்கியது நம்பிக்கை வாக்கெடுப்பு..!

ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் என அனைவருக்கும் ஆன அரசாக தமிழக வெற்றிக்கழக அரசு இருக்கும் என்பதை முதல்வர் விஜய் நிருபித்துள்ளார் என்று தெரிவித்தார். மாநில உரிமைகளை பாதுகாக்க என்றும் தமிழக வெற்றிக்கழக அரசு குரல் கொடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தினார். ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வன்னியரசு வேண்டுகோள் விடுத்தார். ஜோதிடம் பில்லி சூனியம் உண்டவற்றால் மக்கள் ஏமாற்றப்படுவதைகளுக்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். ஈழத் தமிழர்களுக்காகவும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். 

இதையும் படிங்க: புதிய முதல்வருக்கு அக்னி பரீட்சை..! என்ன செய்யணும்..! தவெக MLA- க்களுக்கு பயிற்சி.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share