×
 

அதிரும் அரசியல் களம்..! புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி... திருமாவளவன் முக்கிய அறிவிப்பு..!!

புதுச்சேரியில் மூன்று தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடும் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15-ஆம் தேதி அறிவித்தது. தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும். வேட்புமனு தாக்கல் தொடங்கிய தேதி மார்ச் 16, கடைசி தேதி மார்ச் 23, வேட்புமனு ஆய்வு மார்ச் 24, வேட்புமனு வாபஸ் இழுப்பதற்கான கடைசி நாள் மார்ச் 26. வாக்குப்பதிவு ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும் என்றும் இதே நாளில் தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலத் தேர்தல் முடிவுகளும் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பது குறித்து கட்சிகள் அறிவித்து வருகின்றன. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும் அறிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் மூன்று தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர் கரை ஆகிய மூன்று தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: EPS- ஐ கிள்ளுக் கீரையாக நினைக்கிறது பாஜக.. தொகுதி பங்கீட்டில் இழுபறியா? திருமா. ஓபன் டாக்..!!

நாங்கள் போட்டுவிடாத மற்ற தொகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தரப்படும் என்றும் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரசும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இதுவரை எந்த தொகுதி என்பதை தெரியாத நிலையில், கட்சி நிர்வாகிகள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறினார். 

இதையும் படிங்க: திமுகவில் காலியாகும் அடுத்த விக்கெட்?... அறிவாலயத்திற்கு குடைச்சல் தரும் திருமா... மூணு கன்டிஷன்களில் மொத்தமும் காலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share