#BREAKING: விஜய்க்கு IUML கட்சி முழு ஆதரவு..! தவெக பலம் 120 ஆக உயர்வு..!
தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பின்னர், அரசியல் களம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது. இந்தச் சூழலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) கட்சியின் ஆதரவு பெரும் கவனத்தை ஈர்த்தன.
ஆனால், இறுதியில் அக்கட்சி த.வெ.க.வுக்கு ஆதரவு இல்லை என தெளிவாக மறுத்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பின், த.வெ.க. தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மைக்கு குறைவான இடங்களே கிடைத்திருந்ததால், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு தேடியது.
இந்த வரிசையில் ஐ.யூ.எம்.எல். கட்சியின் தலைவர் காதர் மொய்தீனை த.வெ.க. கொள்கைப் பரப்புப் பொதுச் செயலர் அருண்ராஜ் சந்தித்தார். அப்போது, விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பின், ஐ.யூ.எம்.எல். கட்சி த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கும் என்ற தகவல்கள் பெரும்பான்மைக்கு அருகில் சென்றுவிட்டதாக நம்பிக்கை எழுந்தது.
இதையும் படிங்க: #BIG BREAKING: முதல்வராகிறார் விஜய்..! கிரீன் சிக்னல் காட்டிய திருமா..! விசிக ஆதரவு கடிதத்தை பெற்ற ஆதவ்..!
இருப்பினும், இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஐ.யூ.எம்.எல். மீண்டும் ஆதரவு இல்லை என மறுத்துவிட்டது. தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தற்போது தங்களது ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளது இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பும் வெளியானது. இதற்கான ஆதரவு கடிதத்தை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அருண் ராஜ் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
இதையும் படிங்க: விசிகவுக்கு பதவி ஆசையா..? சிறுமைப்படுத்துறாங்க..! MP ரவிக்குமார் விளக்கம்..!