விசிகவுக்கு பதவி ஆசையா..? சிறுமைப்படுத்துறாங்க..! MP ரவிக்குமார் விளக்கம்..!
விசிக சார்பில் பதவி கேட்பதாக பரவப்படும் தகவல் வதந்தி என MP ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றி கழகத்திற்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தவெகவுக்கு 108 இடங்களுடன் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகின்றன.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு கிடைத்த நிலையில் 116 என்ற எண்ணிக்கை இருக்கிறது. மேலும் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவை தமிழக வெற்றி கழகம் நாடி உள்ளது. இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவும் ஒரு தகவலை வன்மையாக மறுத்துள்ளார்.
விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாக பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த செய்திகளை ஊடகங்கள் நம்ப வேண்டாம் என்றும், விசிகவை சிறுமைப்படுத்தும் முயற்சிகளுக்கு யாரும் உடன்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விளக்கம் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்புடைய ஆதரவு பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியல் கூட்டணி விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், விசிகவுக்கு எதிரான பொய்யான பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளன.
இதையும் படிங்க: பத்தல பத்தல.. அடம் பிடிக்கும் திருமா... விஜய்க்கு வைத்த 4 டிமாண்ட்... தாமதத்திற்கு காரணம் இதுவா?
இத்தகைய சூழலில் ரவிக்குமார் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வேண்டுகோளில், “விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு மாறானவை. ஊடகங்கள் அதை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். விசிகவை சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு ஊடகங்கள் உடன்போக வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை விசிகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவு கொடுக்கணும்..! கையை அறுத்துக் கொண்ட விசிக தொண்டர்..! பரபரப்பு..!