மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!
திமுக தலைவர் மு க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும்பான்மைக்கு தேவையான இரண்டு இடங்களுக்கு விசிக தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகளான சிந்தனை செல்வன், ரவிக்குமார் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார்கள்...
தமிழக அரசியலில் இன்று இரவு ஒரு மிகப்பெரிய திருப்பம் அரங்கேறி வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்டிவிட்டதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திடீரென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தவெக-விற்கு விசிக ஆதரவு அளிப்பதாகச் சில மணி நேரங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் விசிக நிர்வாகிகள் பதிவிட்டிருந்தனர். ஆனால், தற்போது வரை அது குறித்த அதிகாரப்பூர்வ கடிதம் எதுவும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே ஓட்டு தான்..!! மறுவாக்கு எண்ணிக்கை செய்யணும்..! சுப்ரீம் கோர்ட்டை நாடிய பெரிய கருப்பன்.. !
விசிக தலைவர் திருமாவளவன், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சிந்தனைச் செல்வன் மற்றும் ரவிக்குமார் ஆகியோருடன் சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்றுள்ளார். அங்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் முன்னிலையில் உள்ளனர்.
தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாக வெளியான செய்திகள் ஒருபுறம் இருக்க, விசிக தரப்பிலிருந்து இன்னும் முறையான அறிவிப்பு வரவில்லை. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, தனது அடுத்தகட்ட நகர்வு குறித்து ஸ்டாலினுடன் ஆலோசிப்பதாகத் தெரிகிறது.
தவெக (108) + காங்கிரஸ் (5) + இடதுசாரிகள் (4) என மொத்தம் 117 ஆதரவு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் ஒரு எம்.எல்.ஏ-வின் ஆதரவு கட்டாயம் தேவை. விசிக-வின் 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே விஜய்யால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும். ஆளுநர் ஆட்சியைத் தவிர்க்க ஆதரவு அளிப்பதா அல்லது திமுக கூட்டணியிலேயே நீடிப்பதா என்பதில் விசிக ஒரு இக்கட்டான முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.
முன்னதாக ஐயுஎம்எல் கட்சி திமுக-விற்கே தனது ஆதரவு எனத் தெளிவுபடுத்திய நிலையில், தற்போது விசிக-வின் இந்தச் சந்திப்பு விஜய் தரப்பிற்குச் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 119 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் விஜய் ஆளுநரைச் சந்திக்கத் தயாராக இருந்த நிலையில், விசிக-வின் இந்தத் திடீர் ‘யூ-டர்ன்’ ஆலோசனை தமிழக அரசியலை மீண்டும் ஒரு இழுபறிக்கு இழுத்துச் சென்றுள்ளது.
திருமாவளவன் - ஸ்டாலின் சந்திப்பு முடிந்த பிறகு வெளியாகப்போகும் அறிவிப்பே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும்.
இதையும் படிங்க: போராட்டம் பண்ணுவீங்களா.? மயிலாடுதுறையில் காங்கிரசார் மீது திமுகவினர் தாக்குதல்..!