×
 

ஏய்.. ஏய்... என்ன?... போலீசுடன் விசிகவினர் மல்லுக்கட்டு... முக்கிய நிர்வாகி சட்டை கிழந்ததால் முற்றிய மோதல்...!

மதுரை வாடிப்பட்டியருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம் - போலீசார் விசிகவினரிடையே  தள்ளுமுள்ளு - விசிக நிர்வாகியை சட்டை கிழிந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விசிகவினர் அப்பகுதியில் கொடி மரம் அமைத்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விசிக கொடி கம்பம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடி கம்பம் நடப்பட்டதாகவும், இதற்கு விசிக மற்றும் பொது மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது 

இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: கர்நாடகாவை நம்புறது WASTE..! அனைத்து கட்சி கூட்டம்..! தமிழக அரசுக்கு திருமா. கோரிக்கை..!!

இதில் இரு கொடி மரங்களையும் அகற்றுவது என வருவாய்த்துறையினர் முடிவு செய்து, இன்று நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கொடி மரம் அகற்ற வந்த நிலையில் கொடி மரத்தை அகற்ற அப்பகுதி விசிகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் விசிகவினர் போலீசாரிடமிடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது விசிக நிர்வாகி அதிவீர பாண்டியன் என்பவரை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி செல்ல முயன்ற போது அவரின் சட்டை கிழிந்ததாக கூறப்படுகிறது,

பின்னர் கொடிமரம் அகற்ற எதிர்ப்பு தெரிவித்த விசிகவினர் பொது மக்கள் என 94 பேரை வாடிப்பட்டி போலீசார் கைது செய்து ஆண்டிபட்டி பங்களா பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் அனைவரையும் தங்க வைத்துள்ளனர்.

கொடி கம்பம் அகற்றுவது தொடர்பாக விசிக போலீசாரிடமிடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: செய்தியாளர் கேட்ட ஒற்றை கேள்வி... கையெடுத்து கும்பிட்டு ஓட்டம் பிடித்த விசிக எம்.பி... அப்படி என்ன கேட்டாரு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share