×
 

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்...? - திண்டுக்கல்லை அதிர விட்ட சம்பவம்... அதிர்ச்சி கொடுத்த துண்டுசீட்டு...!

மாணவர்கள் குடிநீர் அருந்துவதற்காக பயன்படுத்தப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கலந்ததாகக் கூறப்படுகிறது,

வேடசந்தூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கலந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அய்யலூர் தங்கமாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக பள்ளி கட்டடத்தின் மாடியில் குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவர்கள் குடிநீர் அருந்துவதற்காக பயன்படுத்தப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கலந்ததாகக் கூறப்படுகிறது,

இதையும் படிங்க: சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால் திமுகவுக்கு நல்லதல்ல! தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

காலை நேரத்தில் குடிநீரில் துர்நாற்றம் வீசியதை கவனித்த பள்ளி நிர்வாகத்தினர் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தபோது அதில் ஒரு பிளாஸ்டிக் கவரில் மலம் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து உடனடியாக அந்தத் தொட்டியில் இருந்த குடிநீர் பயன்படுத்தப்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊழல் இல்லா தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாரீர்! CII மாநாட்டில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share