×
 

ஹரி ஓம்..! ஜெய ஜெய ராமா..! வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்... விண்ணை பிளக்கும் முழக்கம்..!

108 வைணவ தளங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலில் தை மாத பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது. தை மாதத்தில் நடைபெறும் இந்த பிரம்மோற்சவம் 10 நாட்கள் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழா, பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இதில் யானை வாகனம், ஹம்ச வாகனம், சூர்ணாபிஷேகம் போன்ற சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. இறுதியாக இன்று திருத்தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது. காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை அலையாகக் குவிந்தது. பெருமாள் ஸ்ரீ வீரராகவர் தனது தேவியருடன் சேர்ந்து பிரமாண்டமான தேரில் எழுந்தருளினார். தேர் மிக உயரமானது, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டது. பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர்.

"ஹரி ஓம்", "ஜெய ஜெய ராமா", "வீரராகவா" என்ற முழக்கங்கள் வானத்தைத் தொட்டன. பக்தி பரவசத்துடன் தேரோட்டத்தில் கலந்துகொண்டு பக்தர்கள் வழிபட்டனர். தேர் வீதிகளில் செல்லும்போது பூக்கள், பழங்கள், பால் தெளித்து அபிஷேகம் செய்து வழிபட்டனர். இசைக்குழுக்கள், நாதசுவரம், தவில் முழங்க, பக்தி ரசத்தில் மூழ்கிய நிலையில் உற்சவம் நடைபெற்றது.

இதையும் படிங்க: திருவள்ளூரில் நிகழ்ந்த கொடூரம்... இருவர் அடித்தே கொலை.. அதிரவைக்கும் காட்சிகள்..!

இந்த தேரோட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வீரராகவ பெருமாள் வைத்திய நாராயணனாக பக்தர்களால் போற்றப்படுவதால், பலர் தங்கள் நோய் தீர்க்கும் வரம் கேட்டு வடம் இழுத்தனர். திருமணம், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளுடன் பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

இதையும் படிங்க: எல்லாமே பெரியார்தான் என்பவன் எனக்கு ஓட்டு போட வேண்டாம்... சீமான் தடாலடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share