பக்தருக்கு நேர்ந்த பரிதாபம்... வெள்ளிங்கிரி மலையேறிய டாக்ஸி ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழப்பு...!
கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையில் சாமி தரிசனம் செய்யச் சென்ற டாக்ஸி ஓட்டுநர், மலைப்பாதையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கோவை மதுக்கரை அடுத்த கண்ணமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி (32). டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவர், இன்று அதிகாலை பூண்டி அடிவாரத்திலிருந்து வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலுக்குச் செல்வதற்காக மலை ஏறத் தொடங்கினார்.
மயில்சாமி நான்காவது மலைப்பாதையில் ஏறிக்கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதைக் கண்ட சக பக்தர்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினர், அங்கிருந்த தொழிலாளர்களின் உதவியுடன் அவரை மலைப்பாதையிலிருந்து மீட்டு அடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர்.
அடிவாரத்தில் மயில்சாமியைப் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மயில்சாமிக்கு ஏற்கனவே நெஞ்சுவலி பாதிப்பு இருந்ததும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எச்சரித்ததையும் மீறி அவர் மலை ஏறியதும் தெரியவந்துள்ளது.
மயில்சாமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திக்... திக்... திருப்பம்....!! - முக்கிய அஸ்திரத்தை கையில் எடுக்கப்போகும் விஜய்... திராவிட கட்சிகளுக்கு செம்ம ஷாக்...!
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகையில் ஏன் நிரூபிக்கணும்..? சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டிய ப.சிதம்பரம்..!