ஓட்டுக்காக மட்டும் வரீங்களே... பாய், போர்வை குடுத்தா போதுமா... மேயரை கேள்விகளால் துளைத்த மக்கள்...!
தண்ணீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட சென்று வேலூர் மேயரிடம் மக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கிடையில் மோன்தா புயல் உருவாகி இருப்பதால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து வருவதால் தாழ்வான பகுதிகளிலும் குடியிருப்புகளிலும் மழை நீர் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசின் சார்பில் மழை நீரை அகற்றும் பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வேலூர் மாவட்டம் இந்திரா நகர் பகுதியில் மழை நீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக கழிவுநீர் அங்கு தேங்கி இருந்த நிலையில் மழை நீரும் கலந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கனமழையின் காரணமாக வேலூர் மாவட்டம் இந்திரா நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் தேங்கி உள்ளது.
அப்போது அங்குள்ள நிலைமையை பார்வையிடுவதற்காக மாவட்ட ஆட்சியருடன் மேயர் சென்றிருந்தார். அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி பெண்கள் ஆவேசமடைந்தனர். கால்வாய் கட்டிக் கொடுப்பேன் என கூறிவிட்டு தற்போது பாய் போர்வையை மட்டும் கொடுப்பதா என்று கேள்வி எழுப்பினர். ஓட்டுக்காக மட்டுமே மேயர் வராங்க என்றும் கால்வாய் கட்டித் தரேன் சொன்னீங்களே., அது என்ன ஆச்சு எனக்கு கேள்வி எழுப்பினார்கள்.
இதையும் படிங்க: ஓட்டு தான் முக்கியம்ல... மக்களுக்கு உதவி பண்ணாம 3000 பேரை கூட்டி கூட்டம்!.. நியாயமா முதல்வரே? விளாசிய தமிழசை...!
இந்திரா நகர் பகுதியில் ஒரு வாரமாக தீங்கி நிற்கும் கழிவு நீரோடு மழை நீரும் கலந்துள்ளதாக குமுறுகின்றனர். வீடு வீடாகச் சென்று விசாரித்து அரசு முகாமுக்கு வாருங்கள் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு நிலையில் பெண்கள் ஆவேசம் அடைந்தனர்.
இதையும் படிங்க: நெல்மணிகளை காக்க தவறிய திமுக... நீங்க வீட்டுக்கு போறது உறுதி... தவெக தலைவர் விஜய் கண்டனம்...!