“நாளைக்கு நீ கடை போட மாட்ட” - தள்ளுவண்டிக்காரரிடம் தகராறு செய்த திமுகவினர்... வைரல் வீடியோ!
“இப்ப கடையை எடுக்கலன்னா... நாளைக்கு நீ கடை போட மாட்ட...” என தள்ளுவண்டிக் கடைக்காரரிடம் திமுகவினர் தகராறில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது.
“இப்ப கடையை எடுக்கலன்னா... நாளைக்கு நீ கடை போட மாட்ட...” என தள்ளுவண்டிக் கடைக்காரரிடம் திமுகவினர் தகராறில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது.
கடந்த 25ம் தேதி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே திமுகவின் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டம் நடைபெற்ற அப்பகுதியில் தான் வேலூரின் மிகவும் பிரபலமான முட்டை சேமியா விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகள் உள்ளன. பொதுக்கூட்டம் நடைபெற்றக் கொண்டிருக்கும் போது வெள்ளை, வேட்டி சாட்டையில் வேக, வேகமாக ஓடி வரும் திமுகவினர் சிலர், முட்டை சேமியா போடுவதை உடனடியாக நிறுத்தும் படி தள்ளு வண்டிக்கடைக்காரருடன் தகராறு செய்துள்ளனர்.
பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருப்பதால் கடையை அங்கிருந்து சிறிது தூரம் தள்ளிப்போடும் படியும் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் பொதுக்கூட்டம் நடக்கப்போவது தொடர்பாக தங்களுக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் தரப்படவில்லை என்றும், வியாபாரத்திற்காக கொண்டு வந்த பொருட்கள் வீணாகிவிடும் என்பதால் வேலையை தொடர அனுமதிக்கும் படியும் கடைக்காரர் திமுகவினரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் கடைக்காரர் மற்றும் அவருடன் இருந்த பெண்ணை ஒருமையில் வசைபாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: திமுக கொடி குற்றம் செய்வதற்கான லைசன்ஸா? - கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி!
அந்த வீடியோவில் “லைட்டை ஆப் பண்ணு... முதல்ல நிறுத்து என திமுகவினர் தொடர்ந்து கத்துகின்றனர். கடைக்காரர் தொழில் பண்ணாமல் என்ன செய்வது என கேட்கிறார். அதனால் கோபமடைந்த திமுக நிர்வாகி நாளைக்கு கடை போட மாட்ட நீ. கடையைத் தூக்கி ஓரமா போடுங்க. நாளையில் இருந்து இங்க கடையே போடமாட்டீங்க. நாளையில் இருந்து இங்க ஒரு கடை இருக்காது. தள்ளிப்போ. தள்ளிப்போடுங்க என கத்துகின்றனர்.
இதுகுறித்து திமுக தரப்பில் விசாரித்த போது, “முட்டை சேமியா போடும் சத்தமும், மசாலா நெடியும் மேடையில் பேசுபவர்களையும், கூட்டத்தில் இருந்தவர்களையும் மிகவும் தொந்தரவு செய்தது. ஏற்கனவே 2 முறை கொஞ்ச தூரம் தள்ளிப்போடுங்கள் என சொன்னோம். இல்லையெல் கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள் என கோரிக்கை வைத்தோம். ஆனால் உண்மைக்குப் புறம்பாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அண்ணா அறிவாலயத்தில் நாதகவினர்... தாரைத்தப்பட்டை முழக்க வரவேற்பு... 3000 பேரைத் தட்டித்தூக்கிய ஸ்டாலின்!