வேலூரில் குட்டி முருகர் என கூறப்பட்டு வந்த குழந்தை கைது? உண்மையை அம்பலப்படுத்திய TN FACT CHECK..!
தீர்த்தகிரி முருகன் கோவிலில் யாசகம் பெற்று வந்த சிறுவன் கைது செய்யப்பட்டார் என்ற வதந்திக்கு தமிழக தகவல் சரி பார்ப்பகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தீர்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் என்பது பல நூறு ஆண்டுகள் பழமையானது. இங்கு முருகப் பெருமான் வள்ளி திருமணத்தின்போது இளைப்பாறியதாகவும், அவரது பாதச்சுவடுகள் இங்கு பதிந்ததாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். மலை மீது ஏறும் படிகளில் செல்லும்போது இயற்கை எழிலும், ஆன்மீக சூழலும் நிறைந்திருக்கும்.
இந்த மலைக் கோயிலில் சிறுவன் ஒருவன் அனைவருக்கும் விபூதி வழங்கி யாசகம் பெற்று வந்தார். அவருக்கு பிஸ்கட் போன்ற உணவுகளை மக்கள் வழங்கி வந்தனர். இந்த சிறுவன் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கள் சமீப நாட்களில் பரவலாக வைரலாகி வந்தது.
வேலூர் தீர்த்தகிரி முருகன் கோயிலில் இருக்கும் குட்டிமுருகர் என்று அழைக்கப்படும் குழந்தையை யாசகம் பெறுவதாகக் கூறி காவல்துறை கைது செய்ததாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருவதாக தெரிகிறது. இது முற்றிலும் தவறான தகவல் என தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சாமி திருக்கோயிலில் விபூதி வழங்கி யாசகம் பெற்று வந்த மாற்றுத்திறனாளி குழந்தை மீட்கப் பட்டு அருகாமையில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வட மாநில தொழிலாளிகள் இளைஞரை கொன்றார்களா? உண்மையை உடைத்த FACT CHECK...!
மேலும், அவரது பெற்றோருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், குழந்தை கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது என்றும் தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் தெரிவித்துள்ளது. சிறார்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி தவறான தகவலை பரப்புவது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: மக்களுக்கு உயிர் பயத்தை காட்டுவது தான் சாதனையா? சொல்லுங்க முதல்வரே...! EPS கண்டனம்..!