×
 

மேகதாது விஷயத்தில் என்ன மௌனம்.? கர்நாடக காங்கிரஸுக்கு அழுத்தம் குடுங்க... வேல்முருகன் வலியுறுத்தல்..!!

மேகதாது விவகாரத்தில் இருமாநில காங்கிரஸ் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட இரு மாநில காங்கிரஸ் கூட்டத்தை ராகுல் காந்தி முன்னிலையில் கூட்ட தமிழ்நாடு முதலமைச்சர் முயற்சிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு அரசில் பங்கேற்கும் காங்கிரஸ் அமைச்சர்களுடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்கட்சித் தலைவர்,ராகுல் காந்தி ஆகியோரிடம், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரிடம் மேகதாது அணை குறித்து பேசி, தமிழகத்திற்கு தொடர்ந்து காவேரி மேலாண்மை ஆணையம் கூறியபடி தண்ணீர் வழங்கவும், மேகதாது அணை திட்டத்தை கைவிடவும் பேசி முடிவெடுக்க, இரு மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

காவிரி ஆறு 14 மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் 14 மாவட்டங்களின் வேளாண்மையும், ஏறத்தாழ 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் என்பதால் இதனை தமிழக அரசு எதிர்த்து வருகிறது என்றும் கூறினார். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை உச்சநீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கூடங்குளம் மக்கள் குற்றவாளிகளா.? நோகடிக்கும் வழக்குகள்... வேல்முருகன் வைத்த முக்கிய கோரிக்கை..!

மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருப்பதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கூறுவது அப்பட்டமான பொய் என்றும் அண்மையில் டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் சிவகுமார் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை நேரில் சந்தித்து மேகதாது அணை திட்டத்திற்கு விரைவான அனுமதி கேட்டு மனு வழங்கியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசில் பங்கேற்கும் காங்கிரஸ் அமைச்சர்களுடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்கட்சித் தலைவர், ராகுல் காந்தி ஆகியோரிடம், கர்நாடக முதலமைச்சரிடம் மேகதாது அணை குறித்து பேசி, தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கவும், மேகதாது அணை திட்டத்தை கைவிடவும் பேசி முடிவெடுக்க, இரு மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: மின்வெட்டா.? மின் திருட்டா.? தவிக்குது தமிழ்நாடு..! வேல்முருகன் ஆவேசம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share