"பள்ளிக்கரணை பேராபத்து...! சதுப்பு நிலக் கட்டிடம் கூடாது... வேல்முருகன் வலியுறுத்தல்..!!
பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரத்தில் வேல்முருகன் முக்கிய வலியுறுத்தலை முன் வைத்தார்.
சென்னை அருகே பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் மற்றும் சி.எம்.டி.ஏ அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார்.
சென்னை அருகே பெரும்பாக்கத்தில் உள்ள, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டு வந்த ‘பிரிகேட் மார்கன் ஹைட்ஸ்’ அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்று கூறினார். மேலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கிய நிர்வாக அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இவ்விவகாரத்தில் தொடக்கம் முதலே முறைகேடுகளை வெளிக்கொண்டு வர அறப்போர் இயக்கம் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஆகியவற்றின் தொடர்ச்சியான போராட்டங்களும், முன்னெடுப்புகளும், நீதிமன்றத்தை நாடியும் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அறிக்கைகள் மூலமாகவும் இத்திட்டத்தை தீவிரமாக எதிர்த்து வந்ததாக கூறினார்.
இதையும் படிங்க: உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!
பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில எல்லையையொட்டி இத்தகைய கட்டுமானங்கள் அமைவது சென்னையின் இயற்கை வடிகாலையும், சுற்றுச்சூழல் சமநிலையையும் முற்றிலுமாகப் பாதிக்கும் என்று அதிகாரிகளிடம் புகார்கள் அளிக்கப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அளித்த அனுமதியையும் ரத்து செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: தொழிலாளர் கொள்கை எங்கே? ஆளுநர் உரையில் உழைப்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சிஐடியு அதிருப்தி!