×
 

பழைய முதலீடுகளை புதிய சாதனையாக காட்டுவதா.? லிஸ்ட் வெளியிடுங்க.!! விஜய் அரசை தாக்கிய டி.ஆர்.பி. ராஜா..!

சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று டி ஆர் பி ராஜா வலியுறுத்தினார்.

சென்னையில் நடைபெற்ற வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தங்களின் மூலம் 67,452 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு பொறுப்பேற்ற நூறு நாட்களுக்குள் மொத்தம் 1,02,514 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் விரிவாக்கம் அல்லது முந்தைய அரசால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட முதலீட்டு வாய்ப்புகள் இப்போது புதிய சாதனையாக அறிவிக்கப்படுவது சரியல்ல. விரிவாக்கம் வரவேற்கத்தக்கது, பேச்சுவார்த்தைகள் நிறைவேறுவதும் வரவேற்கத்தக்கது, வேலைவாய்ப்புகள் உருவாவதும் நல்லதே என்றார்.

ஆனால் முந்தைய அரசின் காலத்தில் பயிற்றுவிக்கப்பட்ட, பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட முதலீடுகள், ஒரு புதிய மாநாட்டில் வைக்கப்பட்டதால் மட்டும் புதிய சாதனையாக மாறிவிட முடியாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக டைட்டன் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு, டிட்கோ மூலம் ஏற்கனவே உள்ள உறவின் தொடர்ச்சி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த மாநாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்தும் டி.ஆர்.பி. ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: புனித ஜார்ஜ் கோட்டையில் முக்கிய மாற்றம்..! புதிய இடத்திற்கு மாறும் முதல்வர் அலுவலகம்..! ரூ.5.54 கோடிக்கு டெண்டர்..!!

வணிகப் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஊடகங்களுக்கு மாநாட்டை நேரடியாகப் பார்க்க அனுமதி அளிக்கப்படவில்லை என்பதையும், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அதிகாரப்பூர்வப் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிறுவனங்களின் பெயர்கள், முதலீட்டுத் தொகைகள், வேலைவாய்ப்பு விவரங்கள் ஆகியவற்றைக் கொண்ட முழுமையான அதிகாரப்பூர்வப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: ஆணவ படுகொலைகள்..! தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை..!! அமைச்சர் வன்னியரசு உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share