விஜய் தான் விசிலடிச்சான் குஞ்சு ஆகிட்டாரு போல! சரமாரியாக சாடிய அன்பில் மகேஷ்!
விஜய் விசில் அடிச்சான் குஞ்சு போல ஆகிவிட்டாரோ என எண்ண தோன்றுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சித்தார்.
விஜய், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக வலம் வந்தவர். 2024இல் தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்கி, அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கினார். விக்கிரவாண்டியில் நடந்த மாநாடு, அவரது கட்சியின் கொள்கைகளையும், அரசியல் எதிரிகளையும் தெளிவாக அடையாளப்படுத்திய முதல் முக்கிய நிகழ்வாக அமைந்தது. இந்த மாநாட்டில், விஜய் தனது உரையில் தமிழ்நாடு மற்றும் மத்திய அரசுகளை மறைமுகமாக விமர்சித்தார். தொடர்ந்து விசில் அடிச்சான் குஞ்சுகள் என்று நம்மை கூறி விடக்கூடாது என்று பேசி இருந்தார்.
இந்த நிலையில் மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பாசிச பாஜகவும் பாய்சன் திமுகவும் தான் எதிரி என்று தெரிவித்த விஜய் பிரதமர் மோடியையும் முதலமைச்சர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார்.
அதிலும் முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என்று பேசுகிறது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. மூத்த அரசியல்வாதியாக இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என்ற விமர்சிப்பதா என்று கண்டனம் எழுந்தது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிதியை வாங்குறதே சரி! டெல்லியில் முகாமிட்ட அன்பில் மகேஷ்.. தர்மேந்திர பிரதானை சந்திக்க திட்டம்..!
கலைஞர், மு.க. ஸ்டாலின், உதயநிதியுடன் விஜய் குடும்பத்தினர் நல்ல உறவு முறையில் இருந்தவர்கள் தான் என்று தெரிவித்தார் . தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மெச்சூரிட்டியான நிலையில், விஜய் விசில் அடிச்சான் குஞ்சுகள் ஆகிவிட்டாரா என்று கேள்வி எழுப்பினார்.
50 ஆண்டுகால பொது வாழ்வுக்கு சொந்தக்காரரான முதல்வர் குறித்த விஜய் விமர்சித்ததை ஏற்க முடியாது என்றும் கட்சி ஆரம்பித்த காரணத்திற்காகவே வசை பாடுவது ஏற்கத்தக்கதா என்று விஜய் சிந்திக்க வேண்டும் எனவும் கூறினார்
இதையும் படிங்க: மாநாட்டில் பேச வரைமுறை இருக்கு! விஜய் ஏதோ அவதார புருஷரை போல.. விளாசிய மாஜி அமைச்சர்..!!