×
 

பரப்புரையை விடுங்க... இத செய்ங்க தம்பி! விஜய்க்கு சீமான் அறிவுரை...!

பொதுக் கூட்டங்களை நடத்துவது தான் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு நல்லது என சீமான் அறிவுரை வழங்கினார்.

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகத்தை 2024-இல் தொடங்கியபோது, சீமான் ஆரம்பத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்தார். இருப்பினும், 2024 அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநில மாநாட்டில் விஜய் தனது கொள்கைகளாக திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, சீமானின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. 

இதற்கிடையில் கரூரில் நிகழ்த்த துயரச்சம்பவம் அனைவரையும் உலுக்கியது. கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. விஜய் தாமதமாக வந்ததால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்த உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

கரூர் சம்பவத்தை எதிர்பாராத விபத்து என்று சீமான் கூறினார். நடக்கவே கூடாத துயரம் நடந்துவிட்டது என்றும் யாரையும் குறை சொல்லி பயனில்லை எனவும் இது முற்றிலும் தவிர்க்க முடியாத விபத்து எனவும் தெரிவித்தார். புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டின்போது ஏற்பட்ட நெரிசலை ஒப்பிட்டு, அது போலவே இது ஒரு தவறான தருணத்தில் நிகழ்ந்தது என்றும் பாதுகாப்பு குறைபாடு என்று சொல்லக்கூடாது., அது அனைவரின் பொறுப்பு என்று கூறியிருந்தார். 

இதையும் படிங்க: அதெல்லாம் முடியாது! தேவைப்பட்டால் விஜயும் "ARREST"... அமைச்சர் துரைமுருகன் உறுதி...!

இந்த நிலையில், தனது பரப்புரை முறைகளை நிறுத்திவிட்டு பொதுக்கூட்டமாக நடத்துவது விஐய்க்கு நல்லது என்று கூறினார். விஜய் வந்தது பிரச்னைக்கு காரணம் என்றால் அவர்தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் விஜயை எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்துவர பாஜக முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார். விஜய்க்கு ஆதரவாக பாஜக செயல்படுகிறது என்றும் சுட்டி காட்டினார்.

இதையும் படிங்க: கவலையே வேண்டாம்... SIT மூலம் கரூர் உண்மை வெளிவரும்... முதல்வர் ஸ்டாலின் உறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share