தமிழகத்தின் முதல் சிறுபான்மை முதல்வர்!! தவெக தலைவர் விஜய் உருவாக்கிய வரலாறு!! சிறப்பு தருணம்!!
தமிழ்நாட்டின் முதல் சிறுபான்மை முதல்வர்ச்.ஜோசப் விஜய்.. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இது ஒரு தனித்துவமான தருணம்.!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கிறார். இந்த நிகழ்வு தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில், 1949ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழகத்தை ஆண்ட எந்த முதலமைச்சரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல. விஜய் தான் முதல் முறையாக கிறிஸ்தவ சமூகப் பின்னணியில் இருந்து முதல்வர் பதவிக்கு வருகிறார்.
தேர்தல் முடிவுகளின்படி தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மொத்தம் 120 எம்எல்ஏக்களின் பலத்தை தவெக உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து ஆளுநர் தவெகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இந்த அரசியல் கூட்டணிகள் தமிழ்நாட்டில் புதிய சூழலை உருவாக்கியுள்ளன.
இதையும் படிங்க: இனி ஒன்னும் தேறாது!! பழைய பணிக்கே திரும்பினர் திமுக அமைச்சர்களின் உதவியாளர்கள்!!
விஜய் கிறிஸ்தவ வெள்ளாளர் சமூகத்தில் பிறந்தவர். அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். விஜய் பல இந்து கோயில்களுக்கு தொடர்ந்து செல்லும் வழக்கம் கொண்டவர் என்றாலும், தனது முழுப் பெயரான ‘ஜோசப் விஜய்’ என அடையாளப்படுத்தியுள்ளார்.
தேர்தலின்போது பாஜக தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் அவரது மதப் பின்னணியைப் பேசியபோதும், தமிழ்நாட்டு மக்கள் மதம் அல்லது ஜாதியைப் பார்க்காமல் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளனர். ஜாதி ஆதிக்கம் மிகுந்த பகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றது இதற்குச் சான்றாகும்.
17ஆவது தமிழக சட்டப்பேரவையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 25 உறுப்பினர்கள் இடம்பெற உள்ளனர். இதில் 13 பேர் தவெகவைச் சேர்ந்தவர்கள். ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்ற மேரி வில்சன், ராணிப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த தாஹிரா உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். மொத்தம் எட்டு முஸ்லிம் உறுப்பினர்களும் புதிய அவையில் இடம் பெறுகின்றனர். கடந்த அவையில் 15ஆக இருந்த சிறுபான்மையினர் எண்ணிக்கை இம்முறை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்தப் பதவியேற்பு விழா தமிழ்நாட்டில் வெறும் அரசியல் மாற்றம் மட்டுமல்ல, சமூக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. மக்கள் ஜாதி, மதம் ஆகியவற்றைத் தாண்டி தங்களுக்கான தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ள இந்தச் சூழல், தமிழக அரசியலின் ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி செல்வதை உணர்த்துகிறது. விஜயின் தலைமையில் புதிய அரசு எத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: BREAKING NEWS! தவெக தலைவர் விஜய் உயிருக்கு ஆபத்து?!! உச்சக்கட்ட பாதுகாப்பு வேணும்! டிஜிபி-க்கு பறந்தது புகார்!!