Blast சம்பவம்: நடுரோட்டில் மணக்கோலத்தில் நின்ற புதுமண தம்பதி... சட்டென விஜய் செய்த செயல்...!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டிருந்த போது அங்கு வந்த புதுமன தம்பதிகளை தன்னுடைய பரப்புரை வாகனத்தில் ஏற்றி இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இரண்டு நாட்களே இருக்கக்கூடிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக வெற்றிக் கழக தலைவர் தலைவர் விஜயினுடைய பரப்புரை என்பது கவனத்தை பெற்றிருக்கக்கூடிய நிலையில் வண்டலூர் பகுதியில் அவர் ஒரு புதுமன தம்பதியை தன்னுடைய பரப்புரை வாகனத்திலேயே ஏற்றி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருவள்ளூர் மாவட்டத்தில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இந்த பரப்புரையில் கட்சி தொண்டர்கள் கடல் அலை போல் திரண்டு வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர். பூவிருந்தவல்லி சட்டமன்ற வேட்பாளராக உள்ள குட்டி என்ற பிரகாஷம், திருவள்ளூர் சட்டமன்ற வேட்பாளர் அருண் குமார் உள்ளிட்டவர்களுக்கு ஆதரவாக விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் பொன்னேரியில் ரோட் ஷோவில் பங்கேற்க உள்ளார். பஞ்செட்டி பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ரோட் ஷோ நடைபெற்றது. இதற்காக சர்வீஸ் சாலை முழுவதும் தடுப்புகள் வைக்கப்பட்டு பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் சாலைக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிங்க: விஜய் ஆப்செண்ட், ஆர்.டி.சேகர் அப்செட்... பெரம்பூரில் பெண்களின் குரலாக உருவெடுக்கும் திலகபாமா...!
பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட விஜய் அங்கிருந்த டோல் பிளாசாவை கடந்து செல்கையில் புதுமண தம்பதி, நடுவழியில் மணக்கோலத்தில் நின்று விஜயிடம் ஆசி வாங்க காத்திருந்தனர். இதனைக் கண்ட விஜயும் திருமணமான தம்பதியை தன்னுடைய பிரசார வேனுக்குள் வரவழைத்து ஆசீர்வதித்தார்.
அவர்களும் விஜய் காலில் விழுந்து ஆட்சி பெற்றனர். இந்த செயல் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. தொடர்ந்து நடிகர் விஜய்க்கு வழிநடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருச்சியில் பரபரப்பு...! கட்டுக்கடங்காத கூட்டம்.. TVK தொண்டர்கள் மீது லேசான தடியடி...!