சாரை சாரையாக குவியும் தொண்டர்கள்...விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... தவெக எடுத்த முக்கிய முடிவு!
விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது தேர்தல் சுற்றுப்பயணங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 13 ஆம் தேதி முதல் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதலில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய், தொடர்ந்து அரியலூரிலும் விஜய் பிரச்சாரம் செய்தார். பெரம்பலூரில் பிரச்சாரம் செய்ய இருந்த விஜய் அதனை ரத்து செய்துவிட்டார். அதீத கூட்டம் காரணமாக பெரம்பலூர் ஸ்தம்பித்தது.
தொடர்ந்து செப்டம்பர் 20 ஆம் தேதி நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இருந்தார். செப்டம்பர் 27ஆம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரிலும் அக்டோபர் 4 மற்றும் ஐந்தாம் தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோட்டில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 11ல் குமரி நெல்லை தூத்துக்குடி அக்டோபர் 18ல் காஞ்சி வேலூர் ராணிப்பேட்டையில் விஜய் சுற்றுப்பயணம் நடத்துவதாகவும், அக்டோபர் 25ல் தென் சென்னை, செங்கல்பட்டு, நவம்பர் 11ல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.
மேலும், நவம்பர் எட்டாம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரத்தில் சுற்றுப்பயணம் நடத்துகிறார். நவம்பர் 15ஆம் தேதி தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலும் 22ஆம் தேதி கடலூர், 29ஆம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. 15 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: வக்பு விவகாரம்... தவெகவின் சட்ட போராட்டத்திற்கான வெற்றி... மார்த்தட்டிய விஜய்!
ஒரு நாளில் இரண்டு மாவட்டங்களில் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு மாவட்டங்களுக்கு செல்லும் திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெரம்பலூர் மக்களே மறுபடியும் வருவேன்... எனக்கு ரொம்ப வருத்தம்! - விஜய்