×
 

களம் சூடு பிடிச்சாச்சு..! விஜயை எதிர்த்து கமல் பரப்புரை..! பெரம்பூர், திருச்சி கிழக்கில் சம்பவம் இருக்கு..!!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை எதிர்த்து கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் வேட்பு மனு தாக்கல், வேட்பு மனு பரிசீலனை, மனுக்களை திரும்பப்பெறும் நேரம் உள்ளிட்டவை நிறைவடைந்தன. இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் அனைத்து கட்சிகளினரும் தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வருகின்றனர். திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து களமாடி வருகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடும் இரண்டு தொகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் அவருக்கு எதிராக திமுக கூட்டணியை ஆதரித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான எம்பி கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

இதையும் படிங்க: பழக்க தோஷம்ப்பா... வாய் தவறி இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட செங்கோட்டையன்..!

ஏப்ரல் 17ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி சேகரை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து அன்றைய தினம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து ஏப்ரல் 20ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். 

இதையும் படிங்க: மக்கள் பாதுகாப்புக்கு ஸ்டாலின் தான் பொறுப்பு..! ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share