×
 

#BREAKING: தவெக துண்டை தோளில் தாங்கிய செங்கோட்டையன்… முகமலர்ச்சியுடன் வரவேற்ற விஜய்…!

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு விஜய் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்பட்டார். நேற்றைய தினம் செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இன்று செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பனையூர் அலுவலகத்தில் விஜயை சந்தித்து தன்னை தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைத்துக் கொண்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த உடனேயே செங்கோட்டையனுக்கு விஜய் பொறுப்புகளை வழங்கியுள்ளார். அவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து செங்கோட்டையன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். 

சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த செங்கோட்டையனுக்கு விஜய் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தொடர்ந்து கட்சித் தொண்டையும் செங்கோட்டையனுக்கு விஜய் அணிவித்தார். தொடர்ந்து விஜய்க்கு செங்கோட்டையன் பொன்னாடை போர்த்தி மலர் கொத்து கொடுத்தார். தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையனின் ஆதரவாளர்களான சத்தியபாமா உள்ளிட்டோருக்கு விஜய் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இதையும் படிங்க: விஜய்க்கே தளபதியான செங்கோட்டையன்... தற்கொலைக்கு சமமான முடிவு... மாஜி அமைச்சர் எச்சரிக்கை...!

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள அனைவரையும் கட்சி துண்டு மற்றும் பொன்னாடை அணிவித்து விஜய் வரவேற்றுள்ளார். அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இணைந்துள்ள நிலையில் தவெகவிற்கு பெரும்பலமாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: #BREAKING: செங்கோட்டையனுக்கு ‘தலைமை’ பொறுப்பு... தவெகவில் கால் வைத்ததுமே 2 அதிமுக்கிய பதவிகளை அள்ளிக்கொடுத்த விஜய்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share