×
 

VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

நடிகர் விஜய் சேதுபதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ சுகுமார் வலியுறுத்தினார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் விஜய் சேதுபதி, சமீபத்திய வார இறுதி எபிசோடில் தலைமைத்துவம் குறித்து பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன. வீட்டின் தலைவராக இருந்த ஷாத்திகாவிடம் பேசும்போது, தலைமை என்பது வெறுமனே வாக்குறுதிகளை அள்ளி வழங்குவது மட்டுமல்ல என்றும், பிரச்சினைகள் ஏற்படும்போது பொறுப்பை ஏற்காமல் எதிரணியின் மீது பழியைப் போட்டுவிட்டு ஓடிவிடுவது உண்மையான தலைமைப் பண்பு அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொறுப்பில் இருப்பவர்கள் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்க வேண்டும், கண்ணீர் விட்டு சமாளிக்கக் கூடாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பேச்சு நிகழ்ச்சிக்குள் மட்டும் நின்றுவிடாமல் சமூக வலைதளங்களில் விரிவடைந்து அரசியல் விவாதமாக மாறியது. சிலர் இதை முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு, மறைமுக விமர்சனமாகப் பார்த்தனர். விஜய் சேதுபதி எந்தத் தலைவர் அல்லது கட்சியின் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும், இந்த ஒப்பீடுகள் பரவலாகப் பேசப்பட்டன.

இந்தச் சூழலில் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கமளித்தது. நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே என்றும், அதில் இடம்பெறும் உரையாடல்களை வெளியுலக அரசியல் அல்லது எந்தத் தனிநபருடனும் தொடர்புபடுத்தக் கூடாது என்றும் தெரிவித்தது. இருந்தபோதிலும் சர்ச்சை அடங்கவில்லை. தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்த நிலையில் சூலூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், விஜய் சேதுபதி செல்லும் இடங்களில் எல்லாம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் மின் தேவை உச்சம்..! மின்சார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை..! அமைச்ச நிர்மல் குமார் பேட்டி..!!

இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதி இதுவரை தனது பேச்சு யாரைக் குறித்தது என்பது குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கவில்லை. வரும் வார இறுதி நிகழ்ச்சியில் அவர் ஏதேனும் தெளிவுபடுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. தவெக தரப்பின் இந்த எதிர்வினை, ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் உரையாடலை அரசியல் மோதலாக மாற்றியுள்ளது. இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், இந்த விவகாரம் தொடர்ந்து கவனத்தை ஈர்க்கக்கூடும்.

இதையும் படிங்க: CM விஜயின் லண்டன் விசிட் வெற்றி..! ரூ.15,300 கோடி முதலீடுகள்... தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் புரட்சி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share