×
 

கவர்னர் அர்லேகருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற விஜய்!! பொன்னாடை போர்த்தி மரியாதை!!

விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க நேரு ஸ்டேடியம் வந்த கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் மலர்கூடை கொடுத்து வரவேற்றார். பொன்னாடை போற்றி மரியாதை செய்தார்.

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கிறார். ராஜாஜி முதல் ஸ்டாலின் வரை தமிழகத்தில் இதுவரை 12 முதலமைச்சர்கள் பதவி வகித்துள்ள நிலையில், நபர்கள் அடிப்படையில் விஜய் 13ஆவது முதலமைச்சராக வரலாற்றில் இடம் பெறுகிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இன்று காலை நீலாங்கரை இல்லத்தில் இருந்து கருப்பு பேன்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்தபடி விஜய் புறப்பட்டார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவர் காரில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நோக்கி சென்றார். 

வழிநெடுகிலும் திரண்டிருந்த தொண்டர்கள் விஜய்க்கு உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர். காரில் இருந்தபடியே அவர்களுக்கு விஜய் கை அசைத்து நன்றி தெரிவித்தார். அரங்கத்திற்கு வந்ததும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தமிழகத்தின் முதல் சிறுபான்மை முதல்வர்!! தவெக தலைவர் விஜய் உருவாக்கிய வரலாறு!! சிறப்பு தருணம்!!

 

#WATCH | Chennai: TVK Chief C Joseph Vijay receives Tamil Nadu Governor Rajendra Vishwanath Arlekar at the Jawaharlal Nehru Stadium in Chennai, where Vijay will take oath as the Chief Minister of Tamil Nadu, shortly. pic.twitter.com/0V13fSr7Hq

— ANI (@ANI) May 10, 2026

விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை விஜய் மலர்கூடை கொடுத்து வரவேற்றார். பின்னர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். முழு அரங்கமும் பாதுகாப்பு ஏற்பாடுகளால் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த வரலாற்று தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி ஆதரவுடன் பெரும்பான்மை பலத்தை உறுதி செய்தது. இந்த வெற்றி தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. நடிகராக புகழ்பெற்ற விஜய், அரசியலில் நுழைந்து சொற்ப காலத்திலேயே மக்களின் பெரும் ஆதரவைப் பெற்று முதலமைச்சர் பதவிக்கு உயர்ந்துள்ளார். இது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

பதவியேற்பு விழா முடிந்ததும் புதிய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பணிகளை தொடங்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்படும் நிலையில், விஜயின் தலைமையில் புதிய அரசு எப்படியான செயல்பாடுகளை முன்னெடுக்கும் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: நேரு அரங்கில் ஜோசப் விஜய்! கருப்பு வெள்ளை உடையில் கம்பீரமாக வந்து இறங்கினார் புதிய முதல்வர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share